இன்று களமிறங்கவுள்ள ஆஸி –ஆப்கானிஸ்தான் அணிகள்
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் டுபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய –ஆப்கானிஸ்தான் அணிகள் களமிறங்கவுள்ளன.
இந்த போட்டியானது லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று (28) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.