இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதல் – இருவர் கொலை
பத்தேகமவில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதல் சம்பவத்தில் இரண்டு சகோதரர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக. தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.