தேங்காய் விலை குறைப்பு?
மே மாதத்தின் பின்னர் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேங்காய் மற்றும் தேங்காய் சார் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களில் ஆரம்பமாகுமென்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க குறிப்பிட்டுள்ளாா்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்ய முடியுமென தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அறுவடை வீழ்ச்சியால் ஏற்படும் பற்றாக்குறையை நிரப்ப தேங்காய் பால், தேங்காய் பால் மா மற்றும் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.