பிலிப்பைன்ஸில் தீவிபத்து : 8 பேர் பலி
பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவின் புறநகர் பகுதியான குயிசன் நகரில் உள்ள சான் இசிட்ரோ கலாஸ் கிராமத்தில் நேற்று (27) அதிகாலை 3 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.