கிரீன்லாந்தில் தோ்தல்
டென்மார்க்குக்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் இன்று (11) தோ்தல் இடம்பெறவுள்ளது.
கிரீன்லாந்தில் வழமையாக இடம்பெறும் தோ்தல்களில், டென்மார்க்கிலிருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதா, வேண்டாமா என்பதுதான் முக்கிய விவாதமாக இருக்கும்.
ஆனால் இந்த முறை, தாது வளம் நிறைந்த அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்ளவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவருவதுதான் முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே கிரீன்லாந்து அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறுவது மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.