தனது ஓய்வு முடிவு தொடர்பில் கருத்து வெளியிட்ட ரோஹிட்
சம்பியன்ஸ் கிண்ணத்துடன் ரோஹிட் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், தான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என ரோஹிட் தெரிவித்துள்ளார்.