இலங்கை வரும் பங்களாதேஷ் இளையோர் அணி
பங்களாதேஷ் இளையோர் (19 வயதுக்குட்பட்ட) கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியுடன் 6 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் பங்களாதேஷ் இளையோர் அணி இவ்வாறு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 26ஆம் திகதி ஒருநாள் தொடர் ஆரம்பமாகும் நிலையில் ஒருநாள் தொடருக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 24ஆம் திகதி பயிற்சிப் போட்டி நடைபெறும் நிலையில், தொடர்ந்து 26, 28, மே 1, 3, 6, 8ஆம் திகதிகள் முறையே அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ளன.