கிரீன்லாந்து தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி
டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தோ்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
கிரீன்லாந்தில் நடைபெற்ற தேர்தலானது ட்ரம்பின் சூளுரையையும் டென்மார்க்கிடம் இருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதையும் மையப்படுத்தி எதிர்கொள்ளப்பட்டது.
இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னிறுத்திய ஜனநாயகக் கட்சியும், நலேராக் கட்சியும் முதல் இரு இடங்களைக் கைப்பற்றின.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெறும் 9% வாக்குகளை பெற்ற ஜனநாயகக் கட்சி தற்போது 30 சதவிகிதமும், 12% வாக்குகளை பெற்றிருந்த நலேராக் கட்சி தற்போது 25 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.
கிரீன்லாந்து தேர்தல் முடிவானது, டென்மார்க் விற்பனைக்கு இல்லை என்பதை ட்ரம்புக்கு அளித்திருக்கிறது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜென்ஸ் ஃபிரைடெரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
“நாங்கள் அமெரிக்கர்களாகவோ டென்மார்க் மக்களாகவோ இருக்க விரும்பவில்லை. கிரீன்லாந்து மக்களாக இருக்க விரும்புகிறோம். எதிர்காலத்தில் எங்களின் முழு சொந்த சுதந்திரத்தை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் சொந்த நாட்டை நாங்களே கட்டியெழுப்ப விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.