பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் இன்று (13) ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபரும் மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.