மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் பழுதடைந்துள்ள 3 கதிர்வீச்சு இயந்திரங்கள்
மஹரகமவில் உள்ள அபேக்ஷா வைத்தியசாலையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து கதிர்வீச்சு இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அரசாங்க கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, தினமும் சுமார் 250 நோயாளிகளுக்குரிய கதிர்வீச்சு சிகிச்சை தடைபட்டுள்ளதாக அரசாங்க கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
அதன்படி, குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.