நில்வலா கங்கை சுத்திகரிப்புத் திட்டம் அக்குரஸ்ஸவில் ஆரம்பம்
“கிளீன் ஸ்ரீலங்கா“ வேலைத்திட்டத்திற்கு இணையாக, நில்வலா கங்கையை சுத்தப்படுத்தும் சேவ் நில்வலா “SAVE NILWALA” திட்டம், மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நேற்று (13) அக்குரஸ்ஸ பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மனித நடவடிக்கைகளால் மாசுபட்டு வரும் நில்வலா கங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து, குடிநீரின் தரத்தை உயர்த்துவது மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன உட்பட அரச அதிகாரிகள், சேவ் நில்வலா அமைப்பு மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.