உள்நாட்டு பொறிமுறைமூலம் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலில் உறுதியாக இருப்பதாகவும் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.
போருக்கு பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்திற்காக நாங்கள் பணியாற்றுகிறோம். நீதித்துறை பொலிஸ் இப்போது சுயாதீனமாக செயற்படுகின்றன .எனவே உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றினூடாக பிரச்சினைக்கு தீர்வைக் காண நடவடிக்கை எடுப்போம்.எங்களை சந்தேகிக்கத் தேவையில்லை.போருக்குப் பின்னர் வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப விசேட செயலணி ஒன்றை அமைக்க நங்கள் கோரினோம்.தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாங்கள் நேர்மையாக முயற்சிப்போம்.வரலாறில் சிதைந்த இன நல்லிணக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவோம் என்பதனை நாங்கள் உறுதியாக கூற விரும்புகிறோம்.அந்த நம்பிக்கையில் தான் மக்கள் எங்களை தேர்தலில் ஆதரித்தார்கள்.காணாமற் போனவர்கள், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை ஏற்படுத்துவோம்.
கனடாவில் புதிய அரசு அமைந்துள்ளது. கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராக பதவியேற்றுள்ளதை எண்ணி மகிழ்வடைகிறோம்.இலங்கையுடன் பூர்வீகத் தொடர்புள்ள ஒருவர் அந்த இடத்திற்கு வந்துள்ளமை மகிழ்ச்சி.அவரது தந்தையார் ஆனந்த சங்கரி இன நல்லிணக்கத்திற்காக எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றி வருபவர்.
இலங்கை வருவதற்கு விசா பெறுவதை இலகுபடுத்தும் திட்டம் உள்ளது.கிட்டத்தட்ட 43 நாடுகளுக்கு விசாவை இலகுவில் வழங்க முடிவு எடுத்துள்ளோம்,.விரைவில் நடவடிக்கை எடுப்போம். அதேபோல் மலேசியாவுக்கும் கொழும்புக்கும் நேரடி விமான சேவை விரைவில் இடம்பெறவுள்ளது. என அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.