தனது இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மொஹமட் சாலி எம்.பி
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கையளித்துள்ளார் எனவும், அதனால் பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (15) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் வழங்கிய இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சபையில் வாசித்ததுடன், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் ஊடாக பத்தாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.