பொலன்னறுவையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் களேபரம்
பொலன்னறுவை மெதிரிகிரியவில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
திவுலன்கடவல ஜனாதிபதி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (14) இரவு இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவிருந்தது. குறித்த நிகழ்ச்சியில் இரண்டு பாடகர்கள் தங்கள் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரத் தவறியதால் வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 1:30 மணியளவில், அறிவிப்பாளர் இரண்டு பாடகர்கள் வராமையினால் நிகழ்வு முடிந்ததாக அறிவித்துள்ளார். இது கூட்டத்தில் ஒரு பகுதியினரிடமிருந்து வன்முறையை தூண்டியுள்ளது. நிகழ்விற்கு வருகை தந்த குழுவினர் மேடை, நாற்காலிகள், பிற சொத்துக்கள் மற்றும் இசைக்குழுவிற்கு சொந்தமான இசைக்கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பிற்காக சுமார் 45 பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அவர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்ட பணத்தை செலுத்தத் தவறியதால், இரண்டு பாடகர்களும் நிகழ்ச்சி வர மறுத்துவிட்டதாகக் மெதிரிகிரிய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது