உள்நாடு

பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதந்த பாடசாலை மாணவர்களுடன் சபாநாயகர் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அண்மையில் (12) வருகைதந்த பாடசாலை மாணவர்கள், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதில் பொலன்னறுவை கல்அமுன மகாவித்தியாலயம், மெதிரிகிரிய தேசிய பாடசாலை மற்றும் மொனராகலை மஹாநாம வித்தியாலயம் என்பவற்றின் மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவ மாணவியருடன் சிநேகபூர்வமாக உரையாடிய சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்தின் சட்டரீதியான செயன்முறைகள் தொடர்பில் மாணவர்களை அறிவுறுத்தினார். பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்றத்தின் அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் காணப்படும் சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தவும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வது தொடர்பிலும் தான் கவனம் செலுத்தியுள்ளதாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன பொலன்னறுவை கல்அமுன மகாவித்தியாலயத்தின் பழைய மாணவராவார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *