காஸா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் : 300 பேர் பலி !
காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – ஹாஸாவுக்கிடையிலான முதற்கட்டப் போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதனடிப்படையில் இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் விருப்பம் தெரிவித்து அதனை வலியுறுத்தியவேளை இது நடைபெறாத சூழலில், காஸாவுக்கான நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே , காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இதுபற்றி காஸாவின் சுகாதார அமைச்சரகம் வெளியிட்டுள்ள செய்தியில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது இதேவேளை இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹமாஸ் அமைப்பிடமுள்ள 59 பணயக் கைதிகளின் நிலை நிச்சயமற்ற சூழலில் உள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் இஸ்ரேல் ஈடுபடுகிறது என ஹமாஸ் அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கிழக்கு காஸா பகுதியில் உள்ள மக்களை வெளியேறும்படியும் இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
ஒருபுறம் சிறைப் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி நடந்தபோதும், மறுபுறம் காஸாவில் தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.