ஹொண்டுராஸில் விமான விபத்து : 12 பேர் பலி
ஹொண்டுராஸ் நாட்டில் சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஹொண்டுராஸ் நாட்டில் ரோவாடன் தீவில் இருந்து லான்சா எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று 17 பயணிகளுடன் நேற்று முன்தினம் (17) புறப்பட்டபோது திடீரென விபத்தில் சிக்கி கடலில் விழுந்தது.
இதனை பார்த்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 5 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் முழு உயரத்திற்கு செல்ல முடியாமல், விபத்தில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது என பொலிஸார் தெரிவித்தனர்.