4 மாதங்கள் கிரிக்கெட் ஆட முடியாத நிலைக்குள்ளான இங்கிலாந்து வீரர்
அண்மையில் நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது உபாதைக்குள்ளான இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டின் ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், இடது முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக அவர் குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.