WhatsApp ஹேக் செய்யப்பட்டிருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது ?
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் வலுவான பாதுகாப்பை வழங்கினாலும், ஹேக்கர்கள் ஏதோ ஒரு வகையில் பயனர்களை ஏமாற்றுவதைத் தொடர்கின்றனர்.
ஹேக்கர்கள் சமூக பொறியியல் அல்லது தீம்பொருள், ஸ்பைவேர் அல்லது ஃபார்வர்டு கால் தாக்குதல்கள் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி வட்ஸ்ஆப் கணக்குகளை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது.
அந்தவகையில் தெரியாத தொடர்புகளிலிருந்து மெசேஜ் வரலாம். மெசேஜை படிக்காவிட்டாலும், அவற்றைப் படித்தது போல் நீல நிற டிக் தோன்றும். அதேபோல், உங்கள் ஃபைல் ஸ்டோரேஜில் நீங்கள் அனுப்பாத மெசேஜ்கள் இருக்கலாம். உங்கள் தொடர்பு பட்டியலில் புதிய, தெரியாத தொடர்புகள் தோன்றும். இவ்வாறு நடந்தால் வட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்று உறுதிப்படுத்த முடியும்.