நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்ன பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹூங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (20) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 43 வயதுடைய ரன்ன, லேனமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.