பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்
பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பிணைக் கைதிகளை விடுவிக்க காலதாமதம் ஏற்படின் காஸாவில் உள்ள பகுதிகளை கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தரைவழியாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.