RCB அணிக்கு 175 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த KKR
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி இடம்பெற்ற நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது
முதல் இன்னிங்சில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுள்ளது
இதில் ரஹானே அரைசதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது