ஐ.பி.எல் 2025 – ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ்
ஐ.பி.எல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தலைவர் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ஓட்டங்களை குவித்தது.
சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 24 ஓட்டங்களும் நிதிஷ் ரெட்டி 30 ஓட்டங்களும் கிளாசன் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 45 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரி உl;பட சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ஓட்டங்களை குவித்தது. இஷான் கிஷன் 106 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்த சன்ரைசர்ஸ் அணி 286 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் 287 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 மாத்திரமிழந்து போட்டியில் தோல்வியுற்றது.