காஸா போரில் இதுவரை 50,000 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தாக்குதல்களில் உயிரிழந்த பலஸ்தீன மக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைக் கடந்துவிட்டதாக பலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் –ஹமாஸ் இடையிலான 2ஆம் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பதில் இழுபறி நிலையேற்பட்டதையடுத்து ஹமாஸ் வசமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படாதென்பதை தெளிவுபடுத்தியுள்ள இஸ்ரேல், காஸா முனையில் தாக்குதல்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, காஸா முழுவதும் இஸ்ரேல் இராணுவம் கடந்த திங்கட்கிழமை முதல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. போர் நிறுத்த முறிவுக்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு சுமார் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.