சென்னை அணிக்கு 156 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த மும்பை
ஐ.பி.எல் 2025 சீசனின் 2ஆவது போட்டித் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
அதன்படி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. அதன்படி சென்னை அணிக்கு 156 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.