அமெரிக்க அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென்னாபிரிக்கர்கள் ஆர்வம்அமெரிக்க அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென்னாபிரிக்கர்கள் ஆர்வம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000க்கும் மேற்பட்ட தென்னாபிரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப்பின் புதிய திட்டத்தின் மூலம் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்த 67,000க்கும் மேற்பட்டோரின் பட்டியலை பெற்றுள்ளதாக தென்னாபிரிக்காவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியன்று டொனால்ட் ட்ரம்ப், தென்னாபிரிக்க அரசு அந்நாட்டிலுள்ள நில உரிமையாளர்களின் மீது இன ரீதியான வன்முறையை தூண்டுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா வழங்கும் நிதியை இரத்துச் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வெளியுறவுத்துறையமைச்சர் மார்கோ ரூபியோவிற்கு வழங்கப்பட்ட உத்தரவில் தென்னாபிரிக்காவின் சிறுபான்மையின மக்கள் இனப்பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அவர்கள் அகதிகள் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளபட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ட்ரம்ப்பின் இந்தத் திட்டத்தை செயல்படுத்த அடுத்தக்கட்ட உத்தரவுகளுக்காக தென்னாபிரிக்காவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.