கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – மேலுமொரு சந்தேக நபர் கைது!
கிராண்ட்பாஸில் உள்ள நாகலகம் வீதியில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரை குறித்த இடத்திற்கு வரவழைத்தாக கூறப்படும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குற்றம் நடந்த இடத்திற்கு வருமாறு தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களை குற்றம் நடந்த இடத்திற்கு வரவழைத்த குற்றச்சாட்டின் பேரில் கிராண்ட்பாஸைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதற்காக மொத்தம் நான்கு சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.