யாழ். பொன்னாலை பாலத்தில் முச்சக்கர வண்டி விபத்து – தந்தையும் மகனும் படுகாயம்!
யாழ்.பொன்னாலை பாலத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
காரைநகரில் இருந்து பொன்னாலை பாலத்தினூடாக பயணம் செய்த முச்சக்கர வண்டியானது இன்று (24) வேகக் கட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு வெளியேறி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தையையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.