உலகம்

விமான சாகசத்தில் ஈடுபட்ட விமானி பலி !

தென்னாபிரிக்காவின் சால்தானா பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்டுருந்த  விமான சாகச நிகழ்ச்சியில்  ஈடுபட்ட விமானி பலியாகியுள்ளார்.

அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டு,. சாகசம் நிகழ்த்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் கானெல் என்ற விமானி இம்பாலா மார்க் 1 ரக விமானத்தில் உயரப் பறந்து விமானத்தை சுழற்றினார். அப்போது நிலை தடுமாறிய விமானம் வேகமாக கீழே விழுந்து நொறுங்கியது.

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த மீட்பு படையினர் விபத்துக் களத்திற்கு விரைந்து சென்று விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து விமானியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட வேளையில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *