மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மின்னல் தாக்கம் குறித்து பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு, ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் ஏற்படும் நேரங்களில் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளைத் தவிர்க்கவும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கம்பி தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
அவசர உதவிக்கு வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.