ஏப்ரல் 6 நடைபெறவிருந்த கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டித் திகதியில் மாற்றம்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறன.
இந்நிலையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு பதிலாக ஏப்ரல் 8-ம் திகதி மதியம் 3.30 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.