உலகம்

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமின்றி இறக்குமதி வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​கும​திக்​கும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் ​ஜனாதிபதியாக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தங்​கள் நாட்​டின் பொருட்​களுக்கு பல நாடு​கள் அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதற்கு பதிலடி​யாக, அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் பிற நாடு​களின் பொருட்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் விதிக்​கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) நாளை ஏப்​ரல் 2-ம் திகதி முதல் வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். இதையடுத்​து, இது தொடர்​பாக உலக நாடு​கள் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றன.

இதனிடையே, ட்ரம்​பின் கூடு​தல் வரி விதிப்​பால் நியாயமற்ற வகை​யில் அமெரிக்க பொருட்​களுக்கு அதிக வரி விதிக்​கும் 10 முதல் 15 நாடு​களுக்கு மட்​டுமே பாதிப்பு ஏற்​படும் என தகவல் வெளி​யாகி இருந்​தது. இந்​நிலை​யில், ஜனாதிபதி ட்ரம்ப் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறும்​போது, “அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும். என்ன நடக்​கிறது என்று பார்ப்​போம்” என்​றார்.

பரஸ்பர வரி விதிக்​கப்​படும் நாளான ஏப்​ரல் 2 அமெரிக்கா​வுக்கு விடு​தலை நாள் என ட்ரம்ப் ஏற்​கெனவே கூறி​யிருந்​தார். அந்த நாள் நெருங்​கிக் கொண்​டிருக்​கும் நிலை​யில், கடைசி நேரத்​தில் வரி​களை சிறிதளவு குறைக்க வாய்ப்பு இருப்​ப​தாக நம்​பப்​படு​கிறது.

மேலும் ட்ரம்ப் கூறும்​போது, “அமெரிக்கா மீது அதிக வரி விதிக்​கும் நாடு​களு​டன் இனிமை​யாக​வும் தாராள​மாக​வும் கனி​வாக​வும் இருப்​பேன். பல தசாப்​தங்​களாக உலக நாடு​கள் அமெரிக்​கா​விடம் காட்​டிய தாராளத்​தை​விட எங்​கள் வரி விதிப்பு கனி​வாக இருக்​கும். வரலாற்​றில் இது​வரை எந்த ஒரு நாடும் பாதிக்​கப்​ப​டாத அளவுக்கு எங்​கள் நாடு பாதிப்​புக்​குள்​ளானது. ஆனால் உலக நாடு​களைப்​போல் அல்​லாமல் மற்ற நாடு​கள் மீது இனிமை​யாக நடந்து கொள்​வோம். இந்த நடவடிக்​கை​யால் எங்​கள் நாட்​டுக்கு கணிச​மான வரு​வாய் கிடைக்​கும்” என்​றார்.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக துறை உயர் அதி​காரி பீட்​டர் நவரோ கூறும்​போது, “உலக நாடு​கள் மீதான பரஸ்பர வரி மூலம் ஆண்​டுக்கு 600 பில்​லியன் டாலர் வரு​வாய் கிடைக்​கும். இதில் வாகன இறக்​கும​தி மூலம்​ மட்​டும்​ 100 பில்​லியன்​ டொலர்​ கிடைக்​கும்​” என்​றார்​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *