வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர் : எழுவர் பலி !
இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில், நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தின், பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள வீடொன்றில் நேற்று (31) இரவு திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், நான்கு குழந்தைகள், உட்பட மொத்தம் ஏழு பேர் பலியாகியுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அதன்படி முதற்கட்ட விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்ததாகவும், அதிலிருந்து தீ பரவியதால், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதும் தெரிய வந்துள்ளது.