பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி
தமிழகத்தின் இராமேஸ்வரம் பாம்பனில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.550 கோடி மதிப்பில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதேவேளை இராமேஸ்வரம் – தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.