வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திருடி விற்பனை செய்த ஐவர் கைது!
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களைத் திருடி பகுதிகளை விற்பனை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முல்லேரியா கல்வலமுல்ல பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் எனவும் மற்றொருவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகமுவ, மல்வானை சந்தி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இளம் தம்பதியினர் திருடி ஹன்வெல்ல பகுதியில் மறைத்து வைத்ததையடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.