பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு : எண்மர் பலி!
பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கம் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக இராணுவ வீரர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் அங்கு விரைந்து சென்ற இராணுவ வீரர்கள் தேடுதலில் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதேவேளை வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதை தொடர்ந்து இராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் துப்பாக்கி சூட்டில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதோடு 4 தீவிரவாதிகள் காயமடைந்தனர்.
இதேவேளை விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் பலியான தீவிரவாதிகள் தெஹ்ரிக்-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.