காலாவதியான விசாக்களுடன் 22 இந்தியர்கள் கைது
இராஜகிரிய அலுவலக வளாகத்தில் பணியமர்த்தப்பட்ட காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 பேரும் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, நாடுகடத்தப்படும் வரை வெலிசர மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.