இந்தியப் பிரதமரை சந்திக்கவுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேம்ஸ் டேவிட் வென்சி எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 நாட்கள் பயணமாக 21ஆம் திகதி டேவிட் வென்சி தனது மனைவி உஷாவுடன் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயணத்தின்போது அமெரிக்கா, இந்தியா இடையேயான வர்த்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.