விளையாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வருடங்கள் பழமை வாய்ந்த நடராஜானந்தபுரம் சித்தி விநாயகர் விளையாட்டு கழகத்தின் உதை பந்தாட்ட சுற்று போட்டி!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நடராஜானந்தபுரம் சித்தி விநாயகர் விளையாட்டு கழகத்தின் 15வது ஆண்டு நிறைவும் உயிரிழந்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நடைபெற்ற மாபெரும் உதை பந்தாட்ட சுற்று போட்டி இறுதி நாள் நிகழ்வு 29 ஆம், 30 ஆம் திகதிகளில் சித்திவிநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 37 கழகங்கள் பங்கு பற்றிய இவ் உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டி கழகத்தின் தலைவர் பா.யோகேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

இதன் போது கரவெட்டி ஆதவன் விளையாட்டு கழகம் மற்றும் காஞ்சிரங்குடா நாக ஒளி விளையாட்டு கழகங்கள் இறுதிப் போட்டியில் விளையாடியதுடன் முதலாம் இடத்தினை கரவெட்டி ஆதவன் விளையாட்டு கழகமும் இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா நாக ஒளி விளையாட்டு கழகமும் மூன்றாம் இடத்தினை முகத்துவாரம் லைட் கவுஸ் அணியும், 4ம் இடத்தினை பட்டிப்பளை வைரவர் விளையாட்டு கழகத்தினரும் பெற்றனர்.

குறித்த நிகழ்வில் படுவான்கரை உதை பந்தாட்ட சம்மேள தலைவர் சி.தசேந்தன் உட்பட கிராம மட்ட அமைப்புக்களின் நிருவாகிகள் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *