விளையாட்டு

ப்ளேஓப் போட்டியில் இருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல் தொடரின் ப்ளேஓப் போட்டியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

ஐந்து முறை ஐ.பி.எல் கிண்ணத்தை வெற்றிகொண்ட அணியான இருந்த மும்பை அணி இம்முறை பெரும் மாற்றங்களுடன் களமிறங்கியது.

அந்த அணியின் தலைமைப் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு, ஹர்த்திக் பாண்டியா தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இதனால் அணிக்கு உள்ளேயும், வெளியேயும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

லீக் போட்டியில் மும்மை அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அதில் வெற்றிகொண்டால் மொத்தம் 12 புள்ளிகளை பெறமுடியும். அது ப்ளேஓப் சுற்றுக்குச் செல்வதற்கு போதுமானது அல்ல.

புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் முதல் இரு இடங்களை பிடித்துள்ள நிலையில் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு அடுத்த நிலையில் மூன்று அணிகள் (சென்னை, லக்னோ மற்றும் டெல்லி) 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதில் டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு தலா இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் சென்னை அணிக்கு மூன்றுப் போட்டிகள் மீதமுள்ளன.

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்மை அணி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று எட்டுப் புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணியும் ப்ளேஓப் வாய்ப்பை இழக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *