உலகம்

பூமியை நோக்கிவரும் விண்கல்

விண்ணிலிருந்து 250 அடி நீள JB2 என்ற விண்கல் இன்று (13) பூமிக்கு அருகே வர வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.

பெரிய கட்டடமொன்றின் அளவிலிருக்கும் குறித்த விண்கல், மணிக்கு 63 ஆயிரத்து 683 கிலோமீற்றர் வேகத்தில் பூமிக்கு மிக அருகில் கடக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 27 இலட்சம் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும் என்பதால் ஆபத்து எதுவும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *