சினிமா

உலக பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்த டெய்லர் ஸ்விப்ட்

போர்ப்ஸ் 2024 பில்லியனியனர் பட்டியலில் அமெரிக்கா பொப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் இடம்பெற்றுள்ளார்.

உலகம் முழுவதுமுள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் நிறுவனம், “எராஸ் டூர் இசை நிகழ்வில் ஈட்டிய, வரிக்கு பிந்தைய வருவாயான 190 மில்லியன் அமெரிக்க டொலர், பில்லியனியர் பட்டியலில் டெய்லரை இணைத்துள்ளது. பாடல் எழுதுதல் மற்றும் இசை நிகழ்வுகள் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டிய முதல் நபர் இவர்” என டெய்லர் ஸ்விப்டைக் குறித்து தெரிவித்துள்ளது.

டெய்லரின் நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்படுகிறது. (இலங்கை மதிப்பில் ஏறத்தாழ 328 கோடி ரூபாய் )அவருடன் பாடகி ரிஹானா, ஓப்ரா வின்பிரே மற்றும் ஸ்டார் வார்ஸ் இயக்குநர் ஜியார்ஜ் லுகாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நட்சத்திர பில்லியனியர் வரிசையில் ஜியார்ஸ் லுகாஸ் 5.5 பில்லியன் டொலர் சொத்து மதிப்போடு முதலிடத்திலுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *