விளையாட்டு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி

நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று(16) நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ஓட்டங்களும், நியூசிலாந்து 211 ஓட்டங்களும் எடுத்தன. 31 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்ளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்துக்கு 267 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தில் டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து நிதானமாக ஆடினாலும், டாம் லாதம் 30 ஓட்டங்களிலும், அடுத்து களம் வந்த ரவீந்திரா 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் அடித்து தனது 98ஆவது டெஸ்டில் 32ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றியை நோக்கி சென்றது. அவருக்கு துணையாக விளையாடிய வில் யங் அரைசதம் அடித்தார்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து 94.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 269  ஓட்டங்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ஓட்டங்களுடனும், வில் யங் 60 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *