வணிகம்

மின் உற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் Adani Green Energy

இலங்கை 2042ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது என கடந்த ஒக்டோபர் 2023 இல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நாட்டின் தேசிய ஆர்வமானது, மின்சக்தியில் தன்னிறைவு மற்றும் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்புக்கான இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளின் ஒரு பகுதியாகும்.

இலங்கையின் தற்போதைய மின்சக்தி உற்பத்தியானது, அதன் அரைவாசிக்கும் மேற்பட்டவை அதாவது 54% பெற்றோலிய எரிபொருட்களாலும் நிலக்கரியினாலும் பூர்த்தி செய்யப்படுகின்றது.

இலங்கையில், Adani Green Energy (Sri Lanka) Ltd நிறுவனத்தின் 386 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கூடிய, 250 மெகாவோட் மன்னார் காற்றாலை மின் திட்டம் மற்றும் 355 மில்லியன் டொலர் முதலீட்டுடனான 234 மெகாவோட் பூநகரி காற்றாலை மின் திட்டம் ஆகியன நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் குழுமத்தினால் நன்கு ஆய்வு செய்யப்பட்ட திட்டங்களாகும்.

அதானி குழுமத்தின் மிக ஆழமான நிபுணத்துவத்தின் ஆதரவுடன் Adani Green Energy (Sri Lanka) Ltd ஆனது, இந்த தனித்துவமானதும் தேவைகளைக் கொண்ட சவால்களுக்கு பதிலளிக்கவும் தேசிய மின் கட்டமைப்புக்கு தொடர்ச்சியாக பசுமை மின்சக்தி விநியோகத்தை உறுதிப்படுத்தவும் தயாராகவுள்ளது.

மன்னார் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டமானது, சிறந்த சூழல் பாதுகாப்புத் திட்டத்தை உள்ளடக்கியுள்ளதன் காரணமாக, அது இலங்கையில் ஒரு முக்கிய பசுமை வலுசக்தித் திட்டமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *