உள்நாடு

ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில்

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (ஒக்டோபர் 10) முதல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் பல சர்ச்சைக்குரிய குற்றங்களுக்குப் பொறுப்பாக இருந்த விசாரணை அதிகாரியாக ஷானி அபேசேகர அறியப்படுகிறார்.

பிரபல துப்பறியும் நிபுணரான இவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை, கொழும்பை சுற்றி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு போன்ற விசாரணைகள் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் இடம்பெற்றன.

அந்த சம்பவங்களுக்கு மேலதிகமாக, ரோயல் பார்க் கொலை, அங்குலான இரட்டைக் கொலை, உடதலவின்ன கொலை, மொஹமட் சியாம் கொலை போன்ற பல சர்ச்சைக்குரிய கொலைகளின் விசாரணையில் ஈடுபட்ட அதிகாரியாகவும் ஷானி அபேசேகர அறியப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *