2.5 மில்லியன் தென்னங்கன்றுகள் பயிரிடத்திட்டம்
நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குத் தீர்வாக தெங்கு பயிர்ச்செய்கைத் திட்டத்தை செயற்படுத்த தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அண்மையில் தொடக்க நிகழ்ச்சி கம்பஹா மாவட்டத்தில் தொடக்கிவைக்கப்பட்டு 2.5 மில்லியன் தென்னங்கன்றுகள் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது
வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் சுமார் ஒரு மில்லியன் தென்னை மரங்களை நடுவதற்கும் தெங்கு பயிர்ச்செய்கை சபை செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.