இந்தியாவுக்கு அமெரிக்கர்களின் வரிப் பணத்தை செலவழிக்க முடியாது : ட்ரம்ப்
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்துவதாக ட்ரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்கத் திறன் துறை அறிவித்தது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு நிதி உதவியை நிறுத்தியது குறித்து ட்ரம்ப் கூறியதாவது:-
இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டொலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதியுதவி தேவையில்லை.
எங்களைப் பொறுத்த வரை உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு தொழில் செய்ய முடியாது. இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இந்தியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஏன் நாம் பணம் கொடுக்க வேண்டும்? அங்கு வாக்குப்பதிவுக்கு 21 மில்லியன் டொலர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அமெரிக்கர்களின் வரி பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.