துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
தெஹியத்தகண்டிய, முவபதிகேவல, ஹுலங்பந்தனகல பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தெஹியத்தகண்டிய பொலிஸார், உயிரிழந்தவர் வீரகெட்டிய, நாட்டிகதெனிய, கிராவெர பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய டி.எச்.சுரேஸ் ஸ்ரீமால் எனத் தெரிவித்தனர்.
நேற்று (22ஆம் திகதி) தனியார் தோட்டமொன்றில் வேலை செய்து கொன்டிருந்த போது துப்பாக்கி இயங்கியதில் காயமடைந்த குறித்த நபர் தெஹியத்தகண்டிய, வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.