ஜனாதிபதி – அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கிடையே வியாழன்று விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையே எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இந்நக் கலந்துரையாடலில் மருத்துவர்களுக்கான பல கொடுப்பனவுகளில் வரவுசெலவுதிட்ட வெட்டுக்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
மருத்துவர்களின் கொடுப்பனவுகள் மற்றும் விடுப்பு முறைமையில் திருத்தங்கள் மற்றும் வெட்டுக்கள் வரவுசெலவுதிட்டத்தில் உள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.