உஸ்வெட்டகெய்யாவ கொலையுடன் தொடர்புடைய எழுவர் கைது
ஜா-எல உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பொலன்னறுவை பகுதியில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.